சென்னை:வேளாண் துறையினர்எடுத்த முயற்சியால் 16 லட்சம் விவசாயிகள், நடப்பு பருவத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. மாநிலம் முழுதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் நஷ்டம் அடைவதை தவிர்க்கும் வகையில், பயிர் காப்பீடு பணிகளை வேளாண் துறையினர் விரைவுப்படுத்தினர்.
பயிர் காப்பீடு செய்வதற்கு 15ம் தேதி கடைசி நாள் என்பதால், விடுமுறை நாட்களிலும் பதிவு நடந்தது. இதன் பயனாக மொத்தம் 16 லட்சம் விவசாயிகள், 27 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். கடந்தாண்டு இதே பருவத்தில், 12 லட்சம் விவசாயிகள், 25 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே காப்பீடு செய்திருந்தனர். வங்கிகளில் பயிர் கடன் பெற்றவர்கள் பட்டியல் சேகரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே, காப்பீடுசெய்த விவசாயிகள் எண்ணிக்கை மற்றும் பரப்பளவு மேலும் அதிகரிக்கும் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE