தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள்... மீண்டு(ம்) துவங்கியது! அரசு நிதி ஒதுக்கீடால் தற்காலிக நிம்மதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகளுக்கு, நான்கு மாதங்களாக அரசு நிதி ஒதுக்காமல் முடங்கிக் கிடந்தது. தற்போது, ஒரு பகுதி நிதி ஒதுக்கப்பட்டதால் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரின் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், இந்தாண்டு துவக்கத்தில் மேற்கு புறவழிச்சாலை திட்டம், 50.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகளுக்கு, நான்கு மாதங்களாக அரசு நிதி ஒதுக்காமல் முடங்கிக் கிடந்தது. தற்போது, ஒரு பகுதி நிதி ஒதுக்கப்பட்டதால் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரின் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், இந்தாண்டு துவக்கத்தில் மேற்கு புறவழிச்சாலை திட்டம், 50.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது.இத்திட்டத்தில், ஜமீன் ஊத்துக்குளியில் மீன்கரை ரோடு, நல்லுார் அருகே பாலக்காடு ரோடு, ஆர்.பொன்னாபுரம் அருகே நடுப்புணி ரோடு மற்றும் சக்தி மில் அருகே கோவை ரோடு ஆகியவற்றை நகருக்கு வெளியே இணைக்கும் படி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக, ஏற்கனவே இருந்த நெடுஞ்சாலை, ஒன்றிய ரோடுகளை இணைத்து, அகலப்படுத்தி, தேவையான இடங்களில் சிறு பாலங்களுடன் அமைக்கப்படுகிறது. மொத்தம், 8.9 கி.மீ., நீளத்துக்கு அமையவுள்ள இந்த ரோட்டின் அகலம், 10 மீட்டராக அமைக்கப்படுகிறது. ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
திட்டப் பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்த நிலையில், பணியின் திட்ட மதிப்பு, 73 கோடியாக உயர்ந்தது. அதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், புறவழிச்சாலையின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிதியை அரசு விடுவிக்காமல் இழுத்தடித்தது.பணியை தொடர நிதி இல்லாததால், ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தி, ரோடு அமைக்கும் தளவாடங்களையும் எடுத்துச் சென்று விட்டார்.இதனால், நான்கு மாதங்களுக்கு மேலாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அவ்வழித்தடத்தை பயன்படுத்தும் கிராம மக்கள், சுற்றுப்பகுதி விவசாயிகள் நகருக்கு வந்து செல்ல, கடும் பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.மக்களின் பிரச்னையை எதிரொலிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழில் இப்பிரச்னை குறித்து, விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் அரசிடம் இருந்து, நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவுக்கு, மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக, நடப்பாண்டு நிதியாக, 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.நிதி வந்ததையடுத்து, ஒப்பந்தாரர் தரப்பு, பணியை தொடர திரும்பியுள்ளது. அகற்றப்பட்ட தளவாடங்கள், திரும்பவும் அமைக்கப்பட்டு, தரைமட்ட பாலம் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டள்ளது.
தீவிர மழை காரணமாக, ரோடு அமைக்கும் பணியில் மந்தநிலை காணப்படுகிறது. மழை குறைந்ததும், பணி வேகம் பிடிக்கும் என நம்பப்படுகிறது.அதிகாரிகள் கவனத்துக்குபுறவழிச்சாலை அமைக்கும் வழித்தடத்தில், ஆர்.பொன்னாபுரம் பிரிவில் இருந்து, தாளக்கரை நான்கு ரோடு சந்திப்பு வரை, ரோட்டின் குறுக்கே மூன்று இடங்களில் தரைமட்ட பாலம் வடிகாலுக்காக அமைக்கப்படுகிறது.பாலம் அமைக்கும் பகுதிகளில், வாகன போக்குவரத்து மாற்றுப் பாதையில் மாற்றப்பட்டுள்ளது. அந்த மாற்றுப் பாதைகள், மழைக்கு சேறும் சகதியுமாக மாறி, வாகனங்களை வீழ்த்துகின்றன.அவற்றை சீரமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சிக்கல் தீரலை

தற்போது ரோடு அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்த தேவையான, 15 கோடி ரூபாய் நிதி இது வரை வருவாய் துறைக்கு அரசு வழங்கவில்லை. இதனால், அப்பகுதிகளில் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ள இயலாது.நில உரிமையாளர்களுக்கு இழ்பீடு வழங்கி, கையகப்படுத்தி நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கும் வரை, இத்திட்டத்தில் நிலவும் சிக்கல் தீர்வு கிடைக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X