தமிழ்நாடு

கனமழையால் புத்துயிர் பெற்ற நீராதாரங்கள் : கொட்டி தீர்த்ததால் பயிர்கள் சேதம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில், இரவு முழுவதும் பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்ய துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு பின், இடைவெளியின்றி கனமழை பெய்ததது. இதனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதேபோன்று, வால்பாறையில் நேற்று

உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில், இரவு முழுவதும் பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்ய துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு பின், இடைவெளியின்றி கனமழை பெய்ததது. இதனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதேபோன்று, வால்பாறையில் நேற்று முன்தினம் மாலையில் துவங்கி, இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால், அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.தொடர் மழையால், வால்பாறையில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.கனமழையால், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு என, அனைத்து அணைகளும் நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது.உடுமலைஉடுமலை பகுதிகளில், இரு நாட்களாக, அதிகன மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.திருமூர்த்தி அணைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலையடிவாரத்தில், பாலாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.அமராவதி அணை நிரம்பியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கிராமங்களிலுள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பாதிப்புபாசன நிலங்களில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளதால், நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும், தக்காளி, வெங்காயம், பந்தல் சாகுபடி காய்கறி பயிர்களும் கடுமையாக பாதித்துள்ளன.அதிகன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


மழையளவு

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 63, சோலையாறு - 34, மேல்நீராறு - 63, கீழ்நீராறு - 66, பரம்பிக்குளம் - 49, ஆழியாறு - 66, மேல்ஆழியாறு - 39, காடம்பாறை - 37, நவமலை - 28, பெருவாரிப்பள்ளம் - 47, வேட்டைக்காரன்புதுார் - 30, மணக்கடவு - 38, துாணக்கடவு - 24, சர்க்கார்பதி - 62, பொள்ளாச்சி - 93.உடுமலை - 40.4, மடத்துக்குளம் - 46, திருமூர்த்தி - 41, நல்லாறு - 53, உப்பாறு - 107 பெதப்பம்பட்டி - 127, அமராவதி - 38 என்ற அளவில் மழை பெய்தது.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X