செய்தி செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய வழித்தடத்தை மேம்படுத்துங்கள்! மலை கிராம மக்கள் கோரிக்கை

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், திருமூர்த்திமலையிலிருந்து குழிப்பட்டி 6 கி.மீ., துாரம் அமைத்துள்ள வழித்தடத்தில் பாதை அமைத்து தர வேண்டும், என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.



உடுமலை: மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், திருமூர்த்திமலையிலிருந்து குழிப்பட்டி 6 கி.மீ., துாரம் அமைத்துள்ள வழித்தடத்தில் பாதை அமைத்து தர வேண்டும், என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமங்களுக்கு முறையாக வழித்தடம் அமைத்தல் உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வியிடம், மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த மனு: பழங்குடியினர் அனைவருக்கும் பாரபட்சமின்றி, வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க வேண்டும்.மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி, தளிஞ்சி, கோடந்துார் ஆகிய பகுதிகளில், மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் வகையில், துவக்கப்பள்ளிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தலா, இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் வந்து செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிலும், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.மலைவாழ் மக்களும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, அட்டகட்டி வழியாக, 60 கி.மீ., வரை சுற்றி வர வேண்டியுள்ளது. உடுமலையிலிருந்து, இந்த குடியிருப்புகளுக்கு, 6 கி.மீ.,துாரம், பாரம்பரிய வழித்தடம் உள்ளது.திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலையிலிருந்து, குழிப்பட்டி வரை, வன உரிமை சட்டப்படி பாதை அமைத்து தர வேண்டும்.மலைப்பகுதியில் உள்ள கோவில் வருமானத்தில், 10 சதவீதம் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு செலவிட வேண்டும், என வனத்துறை உத்தரவு உள்ளது. ஆனால், திருமூர்த்திமலை கோவில் வருவாயில், 10 சதவீதம் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வளர்ச்சி பணி மேற்கொள்ள செலவழிப்பதில்லை. எனவே, மலைவாழ் மக்கள் குடியிருப்பு கிராமசபைக்கு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X