பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்துக்களை தடுக்க புதிய திட்டம்: அரசு முடிவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:சாலை விபத்துக்களை தவிர்த்து உயிரிழப்புகளை தடுக்க, புதிய திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது, 'அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையில் உயிரிழப்புகளை தடுக்கவும்,
 சாலை விபத்துக்களை தடுக்க  புதிய திட்டம்: அரசு முடிவு

சென்னை:சாலை விபத்துக்களை தவிர்த்து உயிரிழப்புகளை தடுக்க, புதிய திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது, 'அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையில் உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்துகளை தவிர்க்கவும், முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என, முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:

* பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய, 'சாலை பாதுகாப்பு ஆணையம்' என்ற ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படும். தொலைநோக்கு திட்டத்துடன், விபத்துகளை தவிர்ப்பது இதன் முதன்மையான இலக்கு

* சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ கவனிப்பை, அரசே மேற்கொள்ளும் வகையில், 'நம்மை காக்கும் 48' என்ற, 'அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவி திட்டம்' செயல்படுத்தப்படும்.
இதற்கென, 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* உடனடி மருத்துவ சேவையை உறுதி செய்ய, 'தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டம்' இயற்ற திட்டமிடப்பட்டு உள்ளது

* சாலை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில், 'இன்னுயிர் காப்போம் - உதவி செய்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்

* பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள, சாலை விதிகள் குறித்த நெறிமுறைகள், மாணவர்களின் அன்றாட நடைமுறையில் பிரதிபலிப்பதை உறுதி செய்வதும் முக்கியமான செயல் திட்டமாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X