கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சருக்கு எதிரான புகார் வழக்கு பதியக்கோரி மனுத்தாக்கல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:தற்கொலைக்கு துாண்டியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை பதிவு செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் மோளையனுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு: நான் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவன். தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., மாணவர்

சென்னை:தற்கொலைக்கு துாண்டியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை பதிவு செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மோளையனுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு: நான் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவன். தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி செயலராக நியமிக்கப்பட்டேன். 2011ல் மோளையனுார் பஞ்சாயத்து தலைவரானேன்.
உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உறவினர் வேலாயுதம் என்பவருக்கும், எனக்கும் இடையே, டெண்டர் ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரின் செல்வாக்கால், தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், கே.பி.அன்பழகனுக்கு இடையில் அரசியல் பிரச்னை இருந்தது. எனக்கும், பழனியப்பனுக்கும் இடையிலான பிரச்னையை பயன்படுத்தி, என்னை அன்பழகன் அணுகினார்.

முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலகம் வரும் போது, தீ குளிக்கும்படி என்னை மூளை சலவை செய்தார்.அன்பழகனின் துாண்டுதலுக்கு நானும் சம்மதித்தேன். 2015 செப்., 29ல், அன்பழகன் காரில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து, முதல்வர் முன்னிலையில் தீ குளிக்க முயற்சித்தேன். அங்கு இருந்தவர்கள் என்னை காப்பாற்றி விட்டனர். கடந்த 2016 தேர்தலில், அன்பழகன் வெற்றி பெற்று அமைச்சரானார்.

அவரது அரசியல் ஆதாயத்துக்காக, என்னை பயன்படுத்தி கொண்டார். அவரது துாண்டுதலால் தான் தற்கொலைக்கு முயன்றேன். பொதுமக்கள் காப்பாற்றாவிட்டால் இறந்திருப்பேன். அவருக்கு எதிராக பல முறை புகார் அளித்தேன். எனக்கு மிரட்டல் வந்தது. 2021 ஜூலை 19ல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புதிதாக புகார் அளித்தேன். என் வாக்குமூலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பதிவு செய்தார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய ஆதாரங்கள் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X