பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிலம்பம்!

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை சேர்த்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, தற்போது நடைமுறையில் உள்ளது.இதன்படி, வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி,

சென்னை:அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை சேர்த்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, தற்போது நடைமுறையில் உள்ளது.இதன்படி, வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி, படகோட்டுதல் வீரர் லஷ்மண் ரோஹித் மரடாப்பா, தடகள வீரர்கள் தருண், தனலட்சுமி, சுபா, மாரியப்பன் ஆகியோருக்கு, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி ஆகிய விளையாட்டுகள் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய, இந்திய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
'இதனால், தமிழகத்தில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பெருமளவில் பயன்பெறுவதுடன், சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது' என, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X