பொது செய்தி

தமிழ்நாடு

குவைத்தில் வீட்டு வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு, பெண் பணியாளர்களை பணியமர்த்த, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அறிவிப்பு:குவைத் நாட்டில் உள்ள, 'குவைத் கேட் பவுண்டேஷன்' என்ற நிறுவனம், அந்நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய, 30 - 40 வயதுக்கு உட்பட்ட பெண்

சென்னை:குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு, பெண் பணியாளர்களை பணியமர்த்த, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அறிவிப்பு:குவைத் நாட்டில் உள்ள, 'குவைத் கேட் பவுண்டேஷன்' என்ற நிறுவனம், அந்நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய, 30 - 40 வயதுக்கு உட்பட்ட பெண் பணியாளர்கள் 500 பேர் தேவைப்படுவதாக தெரிவித்தது.அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு பெண் பணியாளர்களாக, அரபு நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மாத ஊதியமாக, 32 ஆயிரம் ரூபாய்; அனுபவம் இல்லாதவர்களுக்கு, மாத ஊதியம், 29 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படும்.மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு துறை தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தையோ அணுகலாம். மேலும் விபரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X