பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டை அமீர் பதக்கம் விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் பெற தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த, கோவையைச் சேர்ந்த கோட்டை அமீர் பெயரால், 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு, ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின

சென்னை:கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் பெற தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த, கோவையைச் சேர்ந்த கோட்டை அமீர் பெயரால், 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு, ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழாவில், முதல்வரால் பதக்கம் வழங்கப்படுகிறது. பதக்கம் பெறுபவருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.
மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்து வரும், தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதை பெற தகுதி உடையவராவர்; வயது வரம்பு எதுவுமில்லை.வரும் குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ள பதக்கத்திற்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களை அனுப்ப வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் வழியாகவும், https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவும், 'அரசு செயலர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9' என்ற முகவரிக்கு, டிசம்பர் 15க்குள் அனுப்ப வேண்டும்.பதக்கம் பெற தகுதி உள்ளவர், அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X