செய்தி செய்தி

தமிழ்நாடு

'புத்தக பூங்கொத்து' திட்டம்: வகுப்பறைக்கு ஒரு நூலகம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: பள்ளிகளில் 'புத்தக பூங்கொத்து' திட்டத்தை புதுப்பித்து, வகுப்பறைக்கு ஒரு நுாலகமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மத்தியில், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, கடந்த 2009ல், புத்தக பூங்கொத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தந்த வகுப்பறையிலே புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆட்சி மாற்றத்திற்கு பின், இத்திட்டம்

கோவை: பள்ளிகளில் 'புத்தக பூங்கொத்து' திட்டத்தை புதுப்பித்து, வகுப்பறைக்கு ஒரு நுாலகமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மத்தியில், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, கடந்த 2009ல், புத்தக பூங்கொத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தந்த வகுப்பறையிலே புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆட்சி மாற்றத்திற்கு பின், இத்திட்டம் கைவிடப்பட்டது.கொரோனா தொற்றுக்கு பின், மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, புத்தக பூங்கொத்து திட்டத்தை, மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வகுப்பறைக்கு ஒரு நுாலகம் என்ற அடிப்படையில், மாணவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்கள் தேர்வு செய்து, தினசரி வாசிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, குழு அமைத்து, ஆய்வுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.நுாலக ஆய்வுக்குழு அதிகாரி ஒருவர் கூறுகையில்,' கேரளா மாநிலத்தில், வகுப்பறைக்கு ஒரு நுாலக திட்டம், நடைமுறையில் உள்ளது. இங்கு, மாணவர்களின் வாசிப்பு திறனும் மேம்பட்டுள்ளதால், அதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினசரி வாசிக்க புத்தகங்கள் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X