அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பணம் ரூ.2,500: பன்னீர்செல்வம் கோரிக்கை

Updated : நவ 20, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'பொங்கலுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவி, 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பொங்கல் திருநாளையொட்டி, நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நிதியுதவி இல்லாமல், வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் தி.மு.க., அரசு
பொங்கல் பணம், ரூ.2,500: பன்னீர் ,கோரிக்கை

சென்னை:'பொங்கலுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவி, 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பொங்கல் திருநாளையொட்டி, நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், நிதியுதவி இல்லாமல், வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் தி.மு.க., அரசு அறிவித்திருப்பது, மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.கடந்த 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021 பொங்கல் பண்டிகைக்கு 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.ஆனால், 'அதை செய்கிறேன், இதை செய்கிறேன்' எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற நிதியுதவியை கைவிட்டு விட்டது. இதற்கு பெயர் தான், சொல்லாததையும் செய்வோம் என்பது போலும்.
புதிதாக எதையும் செயல்படுத்தவில்லை என்றாலும், ஏற்கனவே இருக்கிற திட்டத்தையாவது தொடர வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு, பொங்கல் பண்டிகைக்கு அளிக்கப்பட்டு வந்த 2,500 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.'ஆன்லைன்' தேர்வு இதேபோல, 'உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆன்லைன் முறையில் தேர்வை நடத்த வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அறிக்கை வாயிலாக வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-நவ-202108:51:42 IST Report Abuse
 Muruga Vel அறத்தொடு குவாட்டர் பாட்டில் ஒன்னும் கொடுத்தா குடிமகன்கள் சந்தோஷப்படுவாங்க
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
19-நவ-202123:39:16 IST Report Abuse
Mohan கவுண்டமணியும் செந்திலும் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க. ரெண்டு விரல காட்டி ரெண்டுக்கு மேல ரக்கமண்ட் பண்ண மாட்றீங்க. அவரு அஞ்சு வெரல காட்டினவரு அஞ்சு கொடுப்பாரு. ஊடால பூந்து செஞ்சு வச்சுராதீங்க. ஒங்க turning earning முடிஞ்சுது, முடிச்சுக்கிட்டீங்க. இப்ப அவரோட earning turning.
Rate this:
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
19-நவ-202108:01:33 IST Report Abuse
S.Pandiarajan ஏய் நானும் ரௌடிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X