செய்தி செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் பணி நீக்க காலம் பணிக்காலமாக மாற்ற உத்தரவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: அரசு உத்தரவையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தற்காலிக பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டார்.தமிழகத்தில் கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஊழியர்கள் மீது தற்காலிக பணி நீக்கம், ஊதியம்

கோவை: அரசு உத்தரவையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தற்காலிக பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டார்.தமிழகத்தில் கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஊழியர்கள் மீது தற்காலிக பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பளமும் வழங்கப்படவில்லை.இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள், தற்காலிக பணி நீக்க காலங்கள் பணிக்காலமாக முறைபடுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.அரசு உத்தரவையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்த கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார். உரிய பதிவுகளை தொடர்புடையவர்களின் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு பணப்பலன்களை பெற்று வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர், கல்லுாரி முதல்வர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X