அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

Updated : நவ 20, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட கோரி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.போக்குவரத்து துறைகடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர் - திருச்செந்துார், கொள்ளேகால் - அன்னுார் - எம்.எம்.மலை - பாலார். பழநி - தாராபுரம், ஆற்காடு -
 தேசிய நெடுஞ்சாலை,பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலின், கடிதம்

சென்னை :தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட கோரி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


போக்குவரத்து துறை

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர் - திருச்செந்துார், கொள்ளேகால் - அன்னுார் - எம்.எம்.மலை - பாலார். பழநி - தாராபுரம், ஆற்காடு - திண்டிவனம், மேட்டுப்பாளையம் - பவானி, அவினாசி - மேட்டுப்பாளையம், பவானி - கரூர் சாலை ஆகியவை, மாநில நெடுஞ்சாலைகளாக உள்ளன.இவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற, 2017 - 18ம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய சாலை போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்த எட்டு சாலைகளும் மிகவும் முக்கியமானவை. புனித தலங்களான திருவண்ணாமலை, திருச்செந்துார், பழநி போன்றவற்றையும், முக்கியமான வர்த்தக, சுற்றுலா மையங்களையும் இணைப்பவையாக உள்ளன.எனவே, இந்த சாலைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற, ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும்.


ஒத்துழைப்பு

மேலும், அவற்றை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202119:44:20 IST Report Abuse
Bhaskaran இவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்னய்யா சம்பந்தம்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
21-நவ-202111:51:28 IST Report Abuse
Matt P ஸ்டாலின் புனித தலங்களுக்கு எல்லாம் காவடி எடுத்து நெடுஞ்சாலைகளில் ஆடப்போறாரு.. விரைவில் குருஞ்சாலைகள் நெடுஞ்சாலைகளாக மாறட்டும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-நவ-202108:50:17 IST Report Abuse
 Muruga Vel ஒன்றிய நெடுஞ்சாலை சரியா இருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X