கேரள பச்சிளம் குழந்தை கடத்தல் குழந்தைகள் நல கமிட்டி அதிரடி

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில் இருந்து, ஓராண்டுக்கு முன் கடத்தப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தையை, ஆந்திராவில்இருந்து ஐந்து நாட்களுக்குள் அழைத்து வந்து ஒப்படைக்கும்படி, குழந்தைகள் நல கவுன்சிலுக்கு குழந்தைகள் நல கமிட்டி உத்தரவிட்டது.கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனுபமா - அஜித் தம்பதிக்கு, கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரத்திலேயே அனுபமாவின்

திருவனந்தபுரம்:கேரளாவில் இருந்து, ஓராண்டுக்கு முன் கடத்தப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தையை, ஆந்திராவில்இருந்து ஐந்து நாட்களுக்குள் அழைத்து வந்து ஒப்படைக்கும்படி, குழந்தைகள் நல கவுன்சிலுக்கு குழந்தைகள் நல கமிட்டி உத்தரவிட்டது.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனுபமா - அஜித் தம்பதிக்கு, கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரத்திலேயே அனுபமாவின் பெற்றோர் குழந்தையை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்று, கேரள குழந்தைகள் நல கவுன்சில் உதவியுடன் ஆந்திராவைச் சேர்ந்த தம்பதிக்கு தத்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அனுபமாவின் தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் பிரமுகராக உள்ளார். வேற்று சமூகத்தைச் சேர்ந்த அஜித்தை, அனுபமா திருமணம் செய்து கொண்டதில் உடன்பாடு இல்லாததால், குழந்தையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் கேரள சட்டசபை வரை எதிரொலித்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.இந்நிலையில் அனுபமா- அஜித் தம்பதி குழந்தையை மீட்டு தரக்கோரி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள குழந்தைகள் நல கவுன்சில் அலுவலகம் முன், பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தக் குழந்தையை சட்ட ரீதியாக தத்தெடுக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, கேரள குடும்ப நல நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, குழந்தைகள் நல கமிட்டி அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதன் விபரம்:ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் உள்ள குழந்தை தங்களுடையது என, அனுபமா - அஜித் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர்.

எனவே, அந்த குழந்தையை சிறுவர்களுக்கான சிறப்பு போலீஸ் படையின் பாதுகாப்புடன் ஐந்து நாட்களுக்குள் கேரள குழந்தைகள் நல கவுன்சில் அதிகாரிகள், கேரளாவுக்கு அழைத்து வர வேண்டும். அந்த குழந்தைக்கு உடனடியாக மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும் வரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் குழந்தை இருக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X