துளிகள் செய்தி

தமிழ்நாடு

வாழை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

Added : நவ 18, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வாழைத்தார், 50 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை ஆனதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - -அன்னூர் சாலையில், வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் ஏலம் நடைபெறும். கடந்த இரு வாரமாக பெய்த மழையால், 3,000 வாழைத்தார் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு தாருக்கு, 50 ரூபாய் விலை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வாழைத்தார், 50 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை ஆனதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - -அன்னூர் சாலையில், வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் ஏலம் நடைபெறும். கடந்த இரு வாரமாக பெய்த மழையால், 3,000 வாழைத்தார் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு தாருக்கு, 50 ரூபாய் விலை குறைந்து விற்பனையானது. ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் கூறுகையில், 'தொடர் மழை காரணமாக, பழத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு வாழைத்தாருக்கும், 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்து பழத்தின் தேவை அதிகரிக்கும்போது, விலை உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X