பார்லிமென்டில் ஒழுக்கமின்மை சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை

Added : நவ 18, 2021
Share
Advertisement
சிம்லா:''சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டில் உறுப்பினர்கள் ஒழுக்கமில்லாமல் நடப்பது மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை தெரிவித்தார்.சபாநாயகர்கள் மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்து வருகிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில்,
 பார்லிமென்டில் ஒழுக்கமின்மை சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை

சிம்லா:''சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டில் உறுப்பினர்கள் ஒழுக்கமில்லாமல் நடப்பது மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை தெரிவித்தார்.
சபாநாயகர்கள் மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்து வருகிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், 'பார்லிமென்டில் ஜனாதிபதியின் உரை மற்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது எந்த இடைஞ்சலும் செய்யக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில், மாநாட்டில் ஓம் பிர்லா நேற்று பேசியதாவது:சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டில் உறுப்பினர்கள் ஒழுக்கமில்லாமல் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அது போல, சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்த, மற்றவரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு சபையில் முயற்சிக்க வேண்டும்.

இது தொடர்பாக உறுப்பினர்கள்பொறுப்பை உணர்ந்து செயல்படுவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்கப்படும்.சட்டசபைகள் மற்றும் பார்லிமென்ட், முழுமையாக செயல்பட வேண்டும். அப்போது தான் தங்கள் தொகுதி மற்றும் நாட்டின் பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதிக்க முடியும். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், சட்டசபை விதிகள் பொதுவானதாக இருக்க வேண்டும். சட்டசபைகளின் மிகச் சிறந்த பாரம்பரியத்தை, கவுரவத்தை கட்டிக் காக்க வேண்டியது சபாநாயகர்களின் கடமை.'ஒரு நாடு, ஒரு பேரவை' என்ற புதிய தளம் உருவாக்கப்படும். இதில், அனைத்து மாநில சட்டசபைகளில் நடக்கும், இதற்கு முன் நடந்த விவாதங்களை தொகுக்க வேண்டும். இது, எதிர்காலத்துக்கு மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும். நவீன தொழில்நுட்ப வசதிகளை, அனைத்து சட்டசபைகளும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X