ஆண்மை நீக்கும் தண்டனை தர பாகிஸ்தான் பார்லி.,யில் மசோதா

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாலியல் பலாத்காரத்தில்பலமுறை ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்செய்யும் தண்டனை வழங்கும் மசோதா பாகிஸ்தான் பார்லிமென்டில் நேற்று நிறைவேறியது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்க துவங்கியதை அடுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி மக்கள் மத்தியில் கோரிக்கை

இஸ்லாமாபாத்:பாலியல் பலாத்காரத்தில்பலமுறை ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்செய்யும் தண்டனை வழங்கும் மசோதா பாகிஸ்தான் பார்லிமென்டில் நேற்று நிறைவேறியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்க துவங்கியதை அடுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் பாலியல்குற்றங்களை விரைவாக விசாரித்து தண்டனை வழங்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தொடர் பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும்தண்டனையை நிறைவேற்ற, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் அல்வி கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் புதிய சட்ட திருத்த மசோதா அந்நாட்டு பார்லி.,யில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதையடுத்து, பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு சில குறிப்பிட்ட மருந்துகளை உடலில் செலுத்துவதன் வாயிலாக, அவரை ஆண்மை அற்றவராக மாற்றுவதே ரசாயன ஆண்மை நீக்கம் என அழைக்கப்படுகிறது.தென் கொரியா, போலந்து, செக் குடியரசு மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் இந்த தண்டனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
19-நவ-202113:01:08 IST Report Abuse
Milirvan ஷரியாவுல இதெல்லாம் ஆவுற கதையில்ல.. ரெண்டு பொம்பள சாட்சி ஒரு ஆம்பள சாட்சிக்கு சமானம்.. இது போல விஷயங்கள்ல எப்புடி ஆம்பள சாட்சிய ஒத்த பொம்பள சாட்சி ஜெயிக்கும்? போதாததுக்கு பொம்பளையையே தூக்கி உள்ள வச்சிடுவானுங்க.. பிலிப்பைன் பொண்ணுங்களுக்கு மத்தியகிழக்குல நடக்குறதுதானே? தொடச்சிக்கினு போவ வேண்டியதுதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X