மின்வெட்டு பிரச்னைக்கு குறும்படம்: தீர்வு காண்பதாக உறுதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
நெகமம்: நெகமத்தில், மின்துறை அமைச்சர் முன்னிலையில், குறும்படம் திரையிட்டு, மின்தடை பாதிப்புகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.நெகமம் பேரூராட்சி மக்களிடம் மனு பெறும் மக்கள் சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், நெகமம் பகுதிக்கு தேவை என்ற அடிப்படையில், 10 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது.அதில், நெகமம் பேரூராட்சி

நெகமம்: நெகமத்தில், மின்துறை அமைச்சர் முன்னிலையில், குறும்படம் திரையிட்டு, மின்தடை பாதிப்புகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.நெகமம் பேரூராட்சி மக்களிடம் மனு பெறும் மக்கள் சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், நெகமம் பகுதிக்கு தேவை என்ற அடிப்படையில், 10 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது.அதில், நெகமம் பேரூராட்சி மட்டுமன்றி சுற்றுப்பகுதி கிராமங்களிலும், நாள் ஒன்றுக்கு, 10 முறை மின்தடை செய்யப்படுகிறது. இதனால், நெகமம் பகுதியில் கைத்தறி நெசவு, விவசாயம், தென்னை நார் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படுகிறது.எனவே, நெகமம் பகுதியில் சீரான, தடையற்ற மின் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினமும் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.காளியப்பம்பாளையம் குடியிருப்பு பகுதியில், தார்ரோடு, தெருவிளக்கு, பொதுக்கழிப்பிடம், குடிநீர் வினியோகம் என, பல வசதிகள் இருந்தும், வீடுகள் அமைந்துள்ள இடங்களுக்கு பட்டா இல்லை. உடனடியாக, பட்டா வழங்க வேண்டும். இவையுள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளுடன் குறும்படக் காட்சிகள் திரையிடப்பட்டன.குறும்படத்தை பார்த்த அமைச்சர், முதல்வரிடம் தெரிவித்து, நெகமம் பகுதிக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, உறுதி அளித்தார்.அரசு நிகழ்ச்சி, அரசின் குறைகளை சுட்டிக்காட்டி குறும்படம் திரையிடப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X