வால்பாறை மலைப்பாதையில் '108' ஆம்புலன்சில் பிரசவம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: 'வால்பாறை மலைப்பாதையில், '108' ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.பொள்ளாச்சி '108' ஆம்புலன்ஸ் மேலாளர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகே பெட்ரோல் பங்க் முன், அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் கிடப்பதாக தகவல் வந்தது. '108' ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணகுமார் அவசரகால டெக்னீசியன் சிவசக்தி ஆகியோர், அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு

பொள்ளாச்சி: 'வால்பாறை மலைப்பாதையில், '108' ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.பொள்ளாச்சி '108' ஆம்புலன்ஸ் மேலாளர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகே பெட்ரோல் பங்க் முன், அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் கிடப்பதாக தகவல் வந்தது. '108' ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணகுமார் அவசரகால டெக்னீசியன் சிவசக்தி ஆகியோர், அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அவர் யார் என விசாரித்து வருகிறோம். அவரது பணம், 2,655 ரூபாயை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.வால்பாறை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் நித்யா,26. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.வரும் வழியிலே, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்ஸ் அவசர கால மருத்தவ டெக்னீசியன் மணிகண்டன், பைலட் ராஜா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். அதில், பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X