செய்தி செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வருமா எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் பாதிப்புகளை துல்லியமாகக் கணிக்க உதவும் எம்.ஆர்.ஐ., ஸ்கேனை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனை, 25 சிகிச்சை பிரிவுகள், 2 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்படுகிறது. மருத்துவமனையில், தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புறநோயாளிகளாகவும், 250 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை

உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் பாதிப்புகளை துல்லியமாகக் கணிக்க உதவும் எம்.ஆர்.ஐ., ஸ்கேனை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனை, 25 சிகிச்சை பிரிவுகள், 2 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்படுகிறது. மருத்துவமனையில், தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புறநோயாளிகளாகவும், 250 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு, விபத்து காரணமாக, தலை மற்றும் எலும்புகளில் காயமடைவோர், உரிய சிகிச்சை அளிக்க, 'சிடி ஸ்கேன்' வசதி உள்ளது.ஆனால், பாதிப்புகளை துல்லியமாகக் கணிக்க, டாக்டர்களுக்கு பெரிதும் உதவும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கிடையாது.
தவிர, ஏழை, எளிய மக்கள் பலர் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து ஸ்கேன் எடுக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இம்மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெறுவர்.தன்னார்வலர்கள் கூறியதாவது: விபத்தில் காயமடைந்து, லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு, 'சிடி ஸ்கேன்' எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருக்கு போராடும் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்க எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அவசியம்.எக்ஸ்ரே மற்றும் சி.டி., ஸ்கேன் படங்களை விட, இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் எலும்பு, மூட்டு, தசை, தசைநார்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் உள்ளிட்டவற்றை மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X