போலீஸ் செய்திகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
வாலிபர் கைதுபொள்ளாச்சி, தன்னாசியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மணவறை அலங்காரம் செய்பவர் அருண்குமார்,21. இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த, 16வயது சிறுமியும் கடந்த, மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.இந்நிலையில், அருண்குமார் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு

வாலிபர் கைதுபொள்ளாச்சி, தன்னாசியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மணவறை அலங்காரம் செய்பவர் அருண்குமார்,21. இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த, 16வயது சிறுமியும் கடந்த, மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.இந்நிலையில், அருண்குமார் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து,கடத்தல் மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ், அருண்குமாரை கைது செய்தனர்.பூட்டிய வீட்டில் திருட்டுபொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ராஜராஜேஸ்வரி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் சீனிவாசன், 48. இவர் கடந்த, 15ம் தேதி உறவினர் இறந்தததற்காக வெளியூர் சென்றுள்ளார்.நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர், வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த, இரண்டரை பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த, 'டிவி'யை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பரோலில் வந்தவர் கைதுஆனைமலை அடுத்த சுப்பேகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் பழனி என்கிற பழனிச்சாமி, 42. இவர், 2004ம் ஆண்டு, அதேபகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கைதாகி, கடலுார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.நேற்று முன்தினம் பரோலில் வெளியில் வந்துள்ளார். கடந்த மாதம், இவரது உறவினரான சதீஸ் மற்றும் அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.பரோலில் வெளியில் வந்துள்ள பழனிச்சாமி, தனது உறவினரிடம் தகராறு செய்த கருப்பசாமியை போனில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அணையில் பெண் தற்கொலைஉடுமலை திருமூர்த்தி அணையில், பெண் சடலம் மிதப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, தீயணைப்பு துறையினர் உதவியுடன் நேற்று, பெண் சடலம் மீட்கப்பட்டது.போலீசார் கூறுகையில், 'உடுமலை அருகேயுள்ள, பெதப்பம்பட்டி, ஆ.அம்மாபட்டியை சேர்ந்த, பெரியராஜ் மனைவி தங்கமணி,45. உடல் நிலை சரியில்லாமல், மனமுடைந்திருந்தார்.அவர், கடந்த, 17ம் தேதி, திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வந்தவர், திருமூர்த்தி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்,' என்றனர். தளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X