செய்தி செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசியே தொற்றில் இருந்து பாதுகாக்கும்! சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: தடுப்பூசியே, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஆயுதம் என்பதை மக்கள் உணர வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதிலும் நேற்று, ஒன்பதாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது 'டோஸ்', 'கோவேக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.பொள்ளாச்சி நகரில், ஐந்து



பொள்ளாச்சி: தடுப்பூசியே, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஆயுதம் என்பதை மக்கள் உணர வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதிலும் நேற்று, ஒன்பதாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது 'டோஸ்', 'கோவேக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.பொள்ளாச்சி நகரில், ஐந்து மையங்கள் அமைக்கப்பட்டு, 347 பேருக்கும்; தெற்கு ஒன்றியத்தில், 19 மையங்களில், 910 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.ஆனைமலை ஒன்றியத்தில், 31 மையங்கள் அமைக்கப்பட்டு, 1,400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. மொத்தம், 2,657 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட, 39 மையங்களில், தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், மொத்தமாக, 1,335 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.வால்பாறையில், நகர், முடீஸ், சோலையாறுநகர், சின்கோனா, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, கவர்க்கல், ரொட்டிக்கடை உள்ளிட்ட, 50 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமில், 669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில், இது வரை, 51,317 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தால், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.தடுப்பூசியே, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஆயுதம் என்பதை மக்கள் உணர வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X