உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் பிரிவு தடகளப் போட்டி, திருப்பூரில் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் என, இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில், உடுமலை அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.அதில், உயரம் தாண்டுதலில், கிருபாகரன்; டிரிபிள் ஜம்ப் போட்டியில், சிவசூர்யா; 110 மீ., தடை தாண்டுதல் ஓட்டத்தில், கரண் ஆகியோர் முதலிடம் வென்றனர். இதேபோல், நீளம் தாண்டுதலில், சிவசூர்யா; 110 மீ., தடை தாண்டுதலில், ராமச்சந்திரன்; உயரம் தாண்டுதலில் ஹரிஹரன்; குண்டு எறிதலில், முத்து;ஈட்டி எறிதலில் சந்திரமுகிலன் ஆகியோர் இரண்டாமிடம் வென்றனர்.மேலும், 100 மீ., ஓட்டத்தில் கண்ணன்; 200 மீ., ஓட்டத்தில், காயத்ரி ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர். இப்போட்டியில் வென்றதன் வாயிலாக, மாநில அளவிலான தடகளப் போட்டிக்கும் தகுதி பெற்றனர். பாராட்டு விழா, கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். எம்.பி., சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியில் வென்றவர்களை வாழ்த்தினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உடற்கல்வி இயக்குநர் மனோகர்செந்துார்பாண்டி, நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE