வாகனங்களுக்கு வாடகை நிலுவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: தேர்தல் பணிக்கு இயக்கப்பட்ட, ஒப்பந்த வாகனங்களுக்கு நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கடந்த சட்டசபை தேர்தலுக்கு, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஒப்பந்த வாடகை அடிப்படையில் இயக்கப்பட்டது. இந்த வாகனங்களுக்கு, உரிய வாடகை தொகை வழங்காமல்,7 மாதமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன

உடுமலை: தேர்தல் பணிக்கு இயக்கப்பட்ட, ஒப்பந்த வாகனங்களுக்கு நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கடந்த சட்டசபை தேர்தலுக்கு, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஒப்பந்த வாடகை அடிப்படையில் இயக்கப்பட்டது. இந்த வாகனங்களுக்கு, உரிய வாடகை தொகை வழங்காமல்,7 மாதமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இத்தொகையை வழங்க வலியுறுத்தி, அனைத்து வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், உடுமலை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, தேர்தல் பணிக்கு இயக்கிய வாகனங்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும், என கூறி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபாவிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X