மாநில அளவிலான தேர்வு விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஊட்டி: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்; வீராங்கனைகள் தேர்வு நடக்க உள்ளது.மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஜெய்சந்திரன் அறிக்கை:ஹரியானா மாநிலத்தில் 'கேலோ' இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது. இதில், 18 வயதிற்கு உட்பட்ட மாநில அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதன்படி, ஹாக்கி பெண்கள் மட்டும் - சென்னை மேயர் ராதாகிருஷ்ணன்

ஊட்டி: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்; வீராங்கனைகள் தேர்வு நடக்க உள்ளது.மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஜெய்சந்திரன் அறிக்கை:ஹரியானா மாநிலத்தில் 'கேலோ' இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது. இதில், 18 வயதிற்கு உட்பட்ட மாநில அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதன்படி, ஹாக்கி பெண்கள் மட்டும் - சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் எக்மோரில், 20ம் தேதி 7:00 மணி; கால்பந்து பெண்கள் மட்டும் - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், காலை, 7:00 மணி; கபடி ஆண்கள் மற்றும் பெண்கள் - நேரு உள் விளையாட்டு அரங்கம், 24ம் தேதி காலை, 7:00 மணி; வாலிபால் ஆண்கள் மட்டும் - நேரு உள் விளையாட்டு அரங்கம், 25ம் தேதி காலை, 7:00 மணி; வாலிபால் பெண்கள் மட்டும் - நேரு உள் விளையாட்டு அரங்கம், 26ம் தேதி, 7:00 மணிக்கு நடக்கிறது.தேர்வு போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்கள், 2003 ஜன.,1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், தற்போது பயிலும் பள்ளி, கல்லுாரியிலிருந்து 'போனப்பைட்' சான்றிதழ், 10ம் வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளுடன் உரிய நாட்களில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, ஜெய்சந்திரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X