மழையில் குடை பிடித்து பயணம்: ஒழுகும் பஸ்களால் பயணிகள் அவதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
பந்தலுார்: அரசு போக்குவரத்து கழகம், கூடலுார் கிளையில், இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை உடைசலாக இருப்பதால், பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கூடலுார் கிளையிலிருந்து, பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் மேற்கூரை மற்றும்

பந்தலுார்: அரசு போக்குவரத்து கழகம், கூடலுார் கிளையில், இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை உடைசலாக இருப்பதால், பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கூடலுார் கிளையிலிருந்து, பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் மேற்கூரை மற்றும் அடிப்பகுதியில் சேதமாகியும் காணப்படுகிறது.தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், பஸ்களின் மேற்கூரை ஒழுகி பயணிக்க முடியாத நிலையில், குடை பிடித்தபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் நனைவதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.இதனால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி, டாக்சியில் பயணித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து நிர்வாகத்திற்கு பயணிகள் பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை. எனவே, ஒழுகும் பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X