வீட்டின் மீது கவிழ்ந்த கார் உயிர் தப்பிய ஏழு பேர் | Dinamalar

வீட்டின் மீது கவிழ்ந்த கார் உயிர் தப்பிய ஏழு பேர்

Added : நவ 18, 2021
Share
கூடலுார்: கூடலுார் அருகே, வீட்டின் மீது கார் கவிழ்ந்த விபத்தில், காரில் பயணித்த மூவர் உட்பட ஏழு பேர் உயிர் தப்பினர்.கர்நாடகாவை சேர்ந்த இருவர், நேற்று முன்தினம், இரவு,11:00 மணிக்கு கூடலுாரை கடந்து, ஊட்டிக்கு காரில் சென்றுள்ளனர். காரை பெங்களூருவை சேர்ந்த சூரியா ஓட்டியுள்ளார்.நடுகூடலுார் அருகே, வளைவான பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் வீட்டின் மீது
 வீட்டின் மீது  கவிழ்ந்த கார் உயிர் தப்பிய ஏழு பேர்

கூடலுார்: கூடலுார் அருகே, வீட்டின் மீது கார் கவிழ்ந்த விபத்தில், காரில் பயணித்த மூவர் உட்பட ஏழு பேர் உயிர் தப்பினர்.கர்நாடகாவை சேர்ந்த இருவர், நேற்று முன்தினம், இரவு,11:00 மணிக்கு கூடலுாரை கடந்து, ஊட்டிக்கு காரில் சென்றுள்ளனர். காரை பெங்களூருவை சேர்ந்த சூரியா ஓட்டியுள்ளார்.நடுகூடலுார் அருகே, வளைவான பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த மூவரும், வீட்டில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாத காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X