'ஆன்லைன்' கல்வி செயல்பாடு ஆசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு

Added : நவ 18, 2021
Share
Advertisement
குன்னுார்: கொரோனா காலத்தில் 'ஆன்லைன் கல்வி ரேடியோ' மூலம் கல்வி செயல்பாடுகள் மேற்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டமைப்பு மூலம். 'ஆன்லைன் கல்வி ரேடியோவில்' மாணவர்கள் தங்களது கல்வி செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். 85 மாணவர்கள்

குன்னுார்: கொரோனா காலத்தில் 'ஆன்லைன் கல்வி ரேடியோ' மூலம் கல்வி செயல்பாடுகள் மேற்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டமைப்பு மூலம். 'ஆன்லைன் கல்வி ரேடியோவில்' மாணவர்கள் தங்களது கல்வி செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். 85 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இதற்காக வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் கல்வி ரேடியோ குழு மூலம் சான்றிதழ்கள் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. இதனை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நஸ்ரூதின் ஊட்டியில் வழங்கினார். அதில், கரன்சி ஊராட்சி பள்ளி ஆசிரியர் புஷ்பாவுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அவர், கரன்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X