சைக்கிள் போக்குவரத்து ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் போக்குவரத்து ராமதாஸ் வலியுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
சென்னை:'மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காட்டும் நல்வழியான சைக்கிள் பயணத்தை, மாநிலம் முழுதும் கட்டாயமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் காற்று மாசை கட்டுப்படுத்த மிகவும் பயனளிக்கக் கூடிய திட்டத்தை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் துவங்கி உள்ளது. வாரிய தலைமை அலுவலக பணியாளர்கள் புதன் கிழமைகளில், இரு சக்கர

சென்னை:'மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காட்டும் நல்வழியான சைக்கிள் பயணத்தை, மாநிலம் முழுதும் கட்டாயமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில் காற்று மாசை கட்டுப்படுத்த மிகவும் பயனளிக்கக் கூடிய திட்டத்தை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் துவங்கி உள்ளது. வாரிய தலைமை அலுவலக பணியாளர்கள் புதன் கிழமைகளில், இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் அலுவலகம் வரக்கூடாது என்ற தடை நடைமுறைக்கு வந்துள்ளது; வரவேற்கத்தக்கது.
வாரிய தலைவர் உதயன் தன் இல்லத்தில் இருந்து, அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். பெரும்பான்மையான ஊழியர்கள் சைக்கிள்களிலும்; வெகு தொலைவிலிருந்து வருவோர் பொது போக்குவரத்து வாயிலாகவும் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி வாயிலாக, வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று மாசு, 20 சதவீதம் குறைந்திருக்கிறது.
எனவே, சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறையை முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, தமிழகத்தில் அனைவரும் வாரம் ஒரு நாள் இதை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான தனிப்பாதை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X