'ஜில்' தரையில் அமர்ந்து குழந்தைகள் படிப்பு! குனியமுத்தூர் அரசு பள்ளியில்தான் இந்த அவலம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
குனியமுத்தூர்: குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுமார், 50 ஆண்டுகளாக நடுநிலை பள்ளியாக, ஒரு ஏக்கர் பரப்பில் செயல்பட்ட இப்பள்ளி கடந்த, பிப்.,ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 1, 200, ஆறு முதல் ஒன்பது வரை, 500 பேரும் என மொத்தம், 1,700 பேர் பயில்கின்றனர். இதுபோக பால்வாடி மையமும் இங்கு



குனியமுத்தூர்: குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுமார், 50 ஆண்டுகளாக நடுநிலை பள்ளியாக, ஒரு ஏக்கர் பரப்பில் செயல்பட்ட இப்பள்ளி கடந்த, பிப்.,ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 1, 200, ஆறு முதல் ஒன்பது வரை, 500 பேரும் என மொத்தம், 1,700 பேர் பயில்கின்றனர். இதுபோக பால்வாடி மையமும் இங்கு உள்ளது.துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் உட்கார பெஞ்ச் கிடையாது. தற்போது மழை பெய்வதால் குழந்தைகள் ஈரப்பதமான தரையிலேயே அமர்ந்து பயிலும் அவலநிலை நிலவுகிறது. பல குழந்தைகள் துணியை விரித்து, அதன் மேல் அமர்கின்றனர். நீண்ட நேரம் அமர்வதால் உடல் ரீதியான பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகமாகும்.அதுபோல், 1, 200 குழந்தைகளுக்கு, 12 ஆசிரியர்களே உள்ளனர். உயர்நிலையில், 500 பேருக்கு, ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். 16 வகுப்பறை உள்ளன. இதனை எட்டு வகுப்பறை ஐந்தாம் வகுப்பு வரை பயில்வோருக்கும். மீதம் எட்டு ஆறு முதல் ஒன்பது வரை பயில்வோருக்கும் என பிரிக்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் கூறியதாவது:குழந்தைகள் உட்கார தேவையான சேர்கள் கிடையாது. மொத்த மாணவர்களுக்கும் குறைந்தபட்சம், 40 வகுப்பறைகள் வேண்டும். 16 தான் உள்ளது. அதுபோல், 45 டீச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 18 பேர் மட்டுமே உள்ளனர்.கழிப்பிடம், தண்ணீர் வசதி கிடையாது. மாநகராட்சி குழாயில் வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. ஆழ்குழாய் கிணறு போட வேண்டும்.இரு கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. புதிய கட்டடம் கூடுதல் பரப்புள்ள இடத்தில் கட்டி கொடுத்தால் நல்லது.இல்லையெனில், மோசமான நிலையிலுள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, அடுக்குமாடி கட்டடங்களாக கட்டலாம். ஆய்வகம் உள்ளிட்ட அனைத்தும் அமைக்க, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.எம்.பி., சண்முகசுந்தரம் கட்டடம் கட்ட, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளார். எம்.எல்.ஏ., வேலுமணி மூன்று வகுப்பறைகள் கட்டி தருவதாக உறுதியளித்துள்ளார். சமூக சேவகர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.இவ்வாறு, மனோகரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X