பெண் மர்ம மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
போத்தனூர்: போத்தனூர் அடுத்த மேட்டூர், அண்ணாபுரத்தை சேர்ந்தவர் ஹாரூன்,60; பெயின்டர். இவர் விவாகரத்தானவர். கடந்த மாதம், பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தை சேர்ந்த அனீஷாபர்வீன், 26 என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் காலை, வேலைக்கு சென்ற ஹாரூன் மதியம் வீடு திரும்பினார்.கதவை தட்டியும் அனீஷா பர்வீன் திறக்கவில்லை. அருகே வசிப்போர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே

போத்தனூர்: போத்தனூர் அடுத்த மேட்டூர், அண்ணாபுரத்தை சேர்ந்தவர் ஹாரூன்,60; பெயின்டர். இவர் விவாகரத்தானவர். கடந்த மாதம், பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தை சேர்ந்த அனீஷாபர்வீன், 26 என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் காலை, வேலைக்கு சென்ற ஹாரூன் மதியம் வீடு திரும்பினார்.கதவை தட்டியும் அனீஷா பர்வீன் திறக்கவில்லை. அருகே வசிப்போர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அனீஷா பர்வீன், தூக்கில் தொங்குவதை கண்டனர்.போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X