பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதா? சூர்யாவுக்கு தேவநாதன் யாதவ் கண்டனம்!

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:'ஹிந்துக்களுக்கு எதிராக, எப்போதும் செயல்படும் போக்கை, நடிகர் சூர்யா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:உண்மைக்கதை என்ற அடிப்படையில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை பெற்றது. எதிர்ப்பதில்லைநல்ல படைப்பையோ அல்லது படைப்பாளியையோ, நாம்

சென்னை:'ஹிந்துக்களுக்கு எதிராக, எப்போதும் செயல்படும் போக்கை, நடிகர் சூர்யா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:உண்மைக்கதை என்ற அடிப்படையில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை பெற்றது.


எதிர்ப்பதில்லை

நல்ல படைப்பையோ அல்லது படைப்பாளியையோ, நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. வரலாற்றை திரைப்படமாக்கும் போது, உள்ளது உள்ளபடி எடுக்க வேண்டும். அதில் பெயர் மாற்றம், காட்சி மாற்றம், கதை மாற்றம் என்று எதையும் செய்யக்கூடாது. அதற்கு அப்பாற்பட்டு, ஜெய்பீம் திரைப்படத்தில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி, பின் அதை குருவாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
வன்னியர் சமுதாயத்தின் அக்னி கலச படம் பொறித்த காலண்டரை வைத்து, இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இதற்கு கண்டன குரல் எழுந்ததும், அந்த சமுதாய காலண்டரை மாற்றி, மகாலட்சுமி படம் பொறித்த காலண்டரை வைத்து, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி உள்ளனர்.
முற்போக்கு என்ற பெயரிலும், படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர்.


கண்டிக்கத்தக்கது

படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாகவும், ஹிந்து மத கடவுளையும் தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்கு உரியது. ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக அறிக்கை விடுகிறோம் என்ற போர்வையில், திரைப்படத் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களுக்கு எதிராக, எப்போதும் செயல்படும் போக்கை, நடிகர் சூர்யா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X