செய்தி செய்தி

தமிழ்நாடு

இன்று கார்த்திகை பவுர்ணமி தெய்வங்களுக்கே தீபாவளி!

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: கார்த்திகை மாதம் முதல் பவுர்ணமி நாளன்று தானம் செய்தால், வாழ்வு தழைக்கும் என்பது ஐதீகம். அதனால் தங்களால் முடிந்தவற்றை ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும், இன்று தானம் செய்யலாம்.இந்து மதத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் பவுர்ணமி, மிகச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று கார்த்திகை பவுர்ணமி. கார்த்திகை மாத சுக்ல பட்சத்தின் முழு நிலவு கார்த்திக் பூர்ணிமா

கோவை: கார்த்திகை மாதம் முதல் பவுர்ணமி நாளன்று தானம் செய்தால், வாழ்வு தழைக்கும் என்பது ஐதீகம்.
அதனால் தங்களால் முடிந்தவற்றை ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும், இன்று தானம் செய்யலாம்.இந்து மதத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் பவுர்ணமி, மிகச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று கார்த்திகை பவுர்ணமி. கார்த்திகை மாத சுக்ல பட்சத்தின் முழு நிலவு கார்த்திக் பூர்ணிமா என்றும், திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.இன்று தானம் செய்வது ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும். ஆகவே தான் இந்நாளில் ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்குகின்றனர்.இந்நாளில் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி தேவியை வழிபட்டால், அனைத்து பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை பவுர்ணமியில் தெய்வங்கள் தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. ஆகவேதான் இது, தேவ தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X