மரம் வெட்ட அனுமதி கோரி 1,720 பேர் மனுத் தாக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்ட அனுமதி கோரி 1,720 பேர் மனுத் தாக்கல்

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:தனியார் பட்டா நிலங்களில், சந்தனம் மரம் உள்ளிட்ட மரங்களை வெட்ட, 1,720 பேர் வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சந்தனம், செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரங்கள், தனியார் நிலங்களிலும் வளர்க்கப் படுகின்றன. இந்த மரங்களை வெட்டி, விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. இதுபோன்ற அதிக மதிப்பு உள்ள மரங்களை வளர்ப்பவர்கள், அதை வெட்டவும், வேறு இடத்துக்கு கொண்டு

சென்னை:தனியார் பட்டா நிலங்களில், சந்தனம் மரம் உள்ளிட்ட மரங்களை வெட்ட, 1,720 பேர் வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் சந்தனம், செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரங்கள், தனியார் நிலங்களிலும் வளர்க்கப் படுகின்றன. இந்த மரங்களை வெட்டி, விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. இதுபோன்ற அதிக மதிப்பு உள்ள மரங்களை வளர்ப்பவர்கள், அதை வெட்டவும், வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும், வனத்துறையின் முன் அனுமதி பெறுவது அவசியம்.
அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள், இதற்கான அனுமதியை வழங்குவர்.லஞ்ச முறைகேடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதை பயன்படுத்தி தற்போது, 1,720 பேர் மரங்கள் வெட்ட அனுமதி கோரி உள்ளனர். அதில், தற்போது வரை 1,093 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X