தமிழ்நாடு

கட்டுமானப்பொருட்கள் விலை... கட்டுப்படியாகலீங்க! கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

Updated : நவ 19, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கட்டுமானப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, கட்டட கட்டுமானப்பொருளுக்கென்று ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.கட்டட கட்டுமானத்துறை கொரோனாவுக்கு பின், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், இத்துறையினர் பரிதவிக்கின்றனர்.இது குறித்து
கட்டுமானப்பொருட்கள் விலை...  கட்டுப்படியாகலீங்க!  கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

கோவை: கட்டுமானப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, கட்டட கட்டுமானப்பொருளுக்கென்று ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

கட்டட கட்டுமானத்துறை கொரோனாவுக்கு பின், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், இத்துறையினர் பரிதவிக்கின்றனர்.இது குறித்து கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் முன்னாள் தலைவர் குருவாயூரப்பன் கூறியதாவது: ஒரு கட்டட ஒப்பந்தம் செய்து கொண்டு, கட்டணம் நிர்ணயித்து பட்ஜெட் போட்டு பணிகளை துவக்கிய பின்,கட்டுமானப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விடுகிறது.
இதனால் கட்டட வல்லுனர் நிர்ணயித்த பட்ஜெட்டிற்குள் பணிகளை நிறைவு செய்ய முடிவதில்லை. ஏற்கனவே பேசிய தொகைக்கு மேல் வீட்டின் கட்டுமான செலவு சென்று விடுகிறது.சிமென்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவை தாறுமாறாக விலை உயர்ந்து விட்டது. அதே போல் பி.வி.சி., பைப்புகள், எலக்ட்ரிக்கல் பிட்டிங் மற்றும்

வயர், செங்கல் மற்றும் பிளை ஆஷ், எம்.சேண்ட், ரெடிமிக்ஸ், ஜல்லி, போல்டர் ஆகியவற்றின் விலையும் எங்கோ போய் விட்டது.
ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் விலையை உயர்த்தி விட்டனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் உள்ளது. ஏராளமான கட்டிய வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.அதில் போட்ட முதலீட்டிற்கு எங்களுக்கு வட்டி வரவினங்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.
கட்டுமானப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, கட்டட கட்டுமானப்பொருட்களுக்கென்று ஒழுங்குமுறை ஆணையத்தை, அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
19-நவ-202109:15:22 IST Report Abuse
Ram விடியல் அரசால் மற்றவர்கள் வாழ்க்கை விடியாமல் போகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X