பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர், சினிமா இயக்குனர் கோவி.மணிசேகரன் மறைவு

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழ் திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான கோவி.மணிசேகரன், 94, வயது மூப்பால் சென்னை கே.கே.நகரில் காலமானார். வேலுாரில் பிறந்த இவர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக, 21 ஆண்டு கள் பணியாற்றினார். நாடகம், சிறுகதை தொகுப்புகள், சமூக வரலாற்று புதினங்கள் எழுதி, 50 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.கடந்த 1992ல் இவர் எழுதிய வரலாற்று புதினமான,
 எழுத்தாளர், சினிமா இயக்குனர் கோவி.மணிசேகரன் மறைவு

சென்னை:தமிழ் திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான கோவி.மணிசேகரன், 94, வயது மூப்பால் சென்னை கே.கே.நகரில் காலமானார்.
வேலுாரில் பிறந்த இவர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக, 21 ஆண்டு கள் பணியாற்றினார். நாடகம், சிறுகதை தொகுப்புகள், சமூக வரலாற்று புதினங்கள் எழுதி, 50 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.கடந்த 1992ல் இவர் எழுதிய வரலாற்று புதினமான, 'குற்றால குறவஞ்சி'க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட படத்தை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய, 'தென்னங்கீற்று' தமிழக ரசிகர் மன்ற விருதையும், கர்நாடக அரசின் நீரிசேஷ விருதையும் பெற்றது. கோவி.மணிசேகரன் உடல் தகனம் இன்று நடக்கிறது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, மூன்று மகன், ஐந்து மகள்களும், 16 பேரன், பேத்திகளும் உள்ளனர்.
கோவி. மணிசேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'தமிழ் எழுத்துலகம் ஒரு மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.இவரது படைப்புகளை ஆராய்ந்து, இதுவரை 23 ஆராய்ச்சியாளர்கள் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள் பெற்றுள்ளனர்.இவர்களில் மூவர், இவரது தமிழ் நடையை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்தியாவில் 21 பல்கலைகளில் இவரது படைப்புகள் பாடநுாலாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202119:01:56 IST Report Abuse
Bhaskaran ஆதித்த கரிகாலன் கொலைவழக்கு கதை எழுதியவர் .முதலில் பகுத்தறிவுகருத்துக்கள் எழுதினார் ஆன்மீகவாதியாக மாறினார் யாகசாலை .தட்சிணபயங்கரன் மனோரஞ்சிதம் ஒருதீபம் ஐந்துதிரிகள் .மாண்புமிகுமுதல்மைச்சர் ராஜகர்ஜனை போன்ற நாவல்களை எழுதியவர் .அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X