சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் நிறுவனம் பண மோசடி போலீசில் நடிகை சினேகா புகார்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:தனியார் சிமென்ட் நிறுவனம், 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நடிகை சினேகா அளித்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், நடிகை சினேகா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கேரளாவில் உள்ள எம்.எஸ்., கவுரி சிமென்ட் அண்டு மினரல் என்ற நிறுவனத்தில், மே மாதம், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.இதற்காக மாதம் 1.80 லட்சம் ரூபாய்

சென்னை:தனியார் சிமென்ட் நிறுவனம், 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நடிகை சினேகா அளித்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், நடிகை சினேகா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கேரளாவில் உள்ள எம்.எஸ்., கவுரி சிமென்ட் அண்டு மினரல் என்ற நிறுவனத்தில், மே மாதம், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.இதற்காக மாதம் 1.80 லட்சம் ரூபாய் லாபம் தருவதாக, சிமென்ட் நிறுவனம் கூறி உள்ளது.
பல மாதங்கள் ஆகியும், லாப பணம் தராததால், முதலீடு பணத்தை திருப்பி கேட்டுள்ளார். சிமென்ட் நிறுவன நிர்வாகிகளான சிவராஜ்கவுரி, சந்தியா ஆகியோர் பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, சினேகா, கணவர் பிரசன்னாவுடன் சென்று, கடந்த மாதம் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் எதிர் தரப்பிடம் ரகசிய விசாரணை நடத்தி உள்ளனர். இதில், பணத்தை திருப்பி தருவதாக, சிமென்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஒரு மாதமாகியும் பணத்தை திருப்பி செலுத்த வில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகை சினேகா வசிப்பது, கானத்துார் காவல் நிலைய எல்லை என்று, நீலாங்கரை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, புகார் கானத்துார் போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X