மின் விநியோகத்தில் தடையில்லை: கோவையில் அமைச்சர் பேட்டி| Dinamalar

தமிழ்நாடு

மின் விநியோகத்தில் தடையில்லை: கோவையில் அமைச்சர் பேட்டி

Added : நவ 18, 2021
Share
கோவை: ''மழையால் மின்விநியோக தடை ஏற்படவில்லை; மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு மின் விநியோகம் சீராக்கப்படும்'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. வாலாங்குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தகுளத்தை மின் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள்
 மின் விநியோகத்தில் தடையில்லை: கோவையில் அமைச்சர் பேட்டி

கோவை: ''மழையால் மின்விநியோக தடை ஏற்படவில்லை; மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு மின் விநியோகம் சீராக்கப்படும்'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. வாலாங்குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தகுளத்தை மின் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதன் பின், நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:பருவமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள, 26 குளங்கள் நிரம்பியுள்ளன. வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் 'பைப்' குறுகலாக உள்ளது. இது மாற்றப்படும். மாவட்டத்தில், 31 பகுதி மற்றும் 7 பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை அகற்றும் பணிநடக்கிறது.கோவையில் மழையால் மின் தடை ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வரும் நாட்களில் மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டு மின்விநியோகம் சீராக்கப்படும்.கோவையில், 150 இடங்களில் மக்கள்சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ரோடுகளை சிறப்பு நிதி மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதன் பின், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும் அமைச்சர் செந்தில்பாலாஜிபார்வையிட்டார். கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X