பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வுக்கு இடமில்லை சி.எம்.டி.ஏ.,வில் புதிய சர்ச்சை

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நகர், ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ., நிர்வாக குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.இதில், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக

சென்னை:நகர், ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ., நிர்வாக குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.

சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

இதில், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முடிவு எடுக்க, சி.எம்.டி.ஏ., நிர்வாக குழுவில், குறிப்பிட்ட அளவுக்கு மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.சட்டப்படி, சென்னை பெருநகரை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்கள்; உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நான்கு பேர் நிர்வாக குழுவில் இடம் பெற வேண்டும்.

இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:நகர், ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ., நிர்வாக குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில், சென்னையில் பல இடங்களில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்றதால், அப்போது இருந்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை ஓரம்கட்டும் போக்கில் செயல்பட்டனர்.

இதனால், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சேர்க்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலான பகுதி யில் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.இவர்களை நிர்வாக குழுவில் சேர்ப்பதில் அதிகாரிகள் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.மக்கள் பிரதிநிதிகள் உள்ளே வந்தால், தங்கள் முறைகேடுகள் அம்பலமாகும் என, அதிகாரிகள் அச்சப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-நவ-202123:25:07 IST Report Abuse
RajanRajan ஓ திராவிட ஊழல் பங்காளிங்க சண்டையா நடக்கட்டும் நடக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X