தமிழ்நாடு

விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரம் கூடாது: மா.கம்யூ.,

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: ''விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரங்கள் செல்ல கூடாது,'' மா.கம்யூ., மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.வ.உ.சி.,யின், 85வது நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு மா.கம்யூ., கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். சிறை வளாகத்தில் உள்ள செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்

கோவை: ''விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரங்கள் செல்ல கூடாது,'' மா.கம்யூ., மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.வ.உ.சி.,யின், 85வது நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு மா.கம்யூ., கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். சிறை வளாகத்தில் உள்ள செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஜெய்பீம் படத்தில் நடித்த சூர்யா மற்றும் இயக்குனர் மீது கடும் விமர்சன தாக்குதல் நடத்தப்படுகின்றது.
திரைத்துறையை இயல்பாக இயங்க அனுமதிக்க வேண்டும் என, பாரதிராஜா உள்பட திரைத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை மா.கம்யூ., வரவேற்கிறது.விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரம் செல்ல கூடாது என்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் வ.உ.சி.,க்கு சிலை வைக்கும் இடத்தில் அவர் இழுத்த செக்கினை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X