தமிழ்நாடு

மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர்களிடம் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை,: பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கோவையை சேர்ந்த, 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் தனியார் பள்ளியில் படித்தார். அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தார். 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைதானார்.மாணவிக்கு பாலியல் தொந்தரவு

கோவை,: பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கோவையை சேர்ந்த, 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் தனியார் பள்ளியில் படித்தார். அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தார். 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைதானார்.மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது குறித்து புகார் வந்தும், போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்ததாக பள்ளி முதல்வர் மினி ஜாக்சன்(எ)மீரா ஜாக்சன், 46 போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் பின், மாணவியின் வீடு, அவரது நண்பர் வீடு, ஆசிரியர் வீடு மற்றும் பள்ளி முதல்வர் அறையில் சோதனையிட்டு நோட்டு, புத்தகங்கள், லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை மேற்கு மகளிர் போலீசார் மாணவி பயின்ற பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர்.உயிரிழந்த மாணவி, மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீார ஜாக்சன், மாணவியின் நண்பர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். மாணவி வீட்டில் கைப்பற்றப்பட்ட பள்ளியில் பயின்ற நோட்டு, புத்தகங்கள், லேப்டாப், மொபைல்போன் குறித்தும் போலீசார் விசாரித்தனர்.இச்சம்பவம் குறித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு உள்ளதால், தாமாக முன்வந்து, நேற்று விசாரணை நடத்தியது.ஆணைய தலைவர் சரஸ்வதி தலைமையில், சட்ட உறுப்பினர் ராமராஜ், டாக்டர் மல்லிகை, டாக்டர் சரண்யா அடங்கிய அமர்வு முன்பு, கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. மாணவியின் பெற்றோர், தலைமை காவலர், இன்ஸ்பெக்டர், புலன் விசாரணை அலுவலர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர்.தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் சரஸ்வதியிடம் கேட்டபோது,'' வழக்கு விசாரணை சரியான கோணத்தில் தான் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, 13 சாட்சியங்களிடம் விசாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொகுத்து, அரசிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X