தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் கனமழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருப்பூர்: குண்டடத்தில் நேற்று முன்தினம், மாநில அளவில் அதிகபட்சமாக, 200 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம், கனமழை பெய்தது. மாலை, 5:45 மணிக்கு துவங்கி, 8:45 மணி வரை, பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மட்டும், தண்ணீர் புகுந்தது. வருவாய்த்துறையும், தீயணைப்பு துறையினரும், பாதுகாப்பான

திருப்பூர்: குண்டடத்தில் நேற்று முன்தினம், மாநில அளவில் அதிகபட்சமாக, 200 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம், கனமழை பெய்தது. மாலை, 5:45 மணிக்கு துவங்கி, 8:45 மணி வரை, பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மட்டும், தண்ணீர் புகுந்தது. வருவாய்த்துறையும், தீயணைப்பு துறையினரும், பாதுகாப்பான பகுதிகளில், மக்களை தங்க வைத்தனர்.மாவட்டத்தில் அதிகபட்சமாக, குண்டடத்தில், 200 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தாராபுரத்தில், 132 மி.மீ., - கலெக்டர் அலுவலக பகுதியில், 110 மி.மீ., - திருப்பூர் தெற்கில், 108 மி.மீ., - திருப்பூர் வடக்கு தாலுகா, அவிநாசி ரோடு பகுதியில், 124 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.தமிழக அளவில், நேற்று முன்தினம் காலை துவங்கி, நேற்று காலை வரை, திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. குண்டடம் ஒன்றிய பகுதிகளில், 200 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாக, பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.போக்குவரத்து பாதிப்புகொடுவாய் - திருப்பூர் சாலையில் அவிநாசிபாளையம் அருகே, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திக்கிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால், அவிநாசிபாளையம் நால்ரோடு சந்திப்பில் மூன்று அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கியது.சாலையில், 200 மீ., துாரத்துக்கு மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால், கோவையில் இருந்து காங்கயம், கரூர் வழியாக திருச்சி செல்லும்வாகனங்கள், நள்ளிரவு முதல் அதிகாலை வரை அப்படியே தேங்கி நின்றன.காரணம் என்ன?அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுக்கு முன் நடந்தது. மழைநீர் செல்ல வடிகால் கட்டப்பட்டது. ஆனால், தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்தவில்லை.நீண்ட இடைவெளிக்கு பின், கனமழை பெய்ததால்,தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பாய்ந்தோடியது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வடிகால் ஏற்படுத்தி வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X