அமராவதி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

அமராவதி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

Added : நவ 18, 2021
Share
உடுமலை: அமராவதி அணை நிரம்பியதால் , உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழையால், ஜூலை, 23ல் அணையின் மொத்த 90 அடியில் . மூன்று மாதமாக, 85 அடி
 அமராவதி அணை நிரம்பியது:  வெள்ள அபாய எச்சரிக்கை


உடுமலை: அமராவதி அணை நிரம்பியதால் , உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழையால், ஜூலை, 23ல் அணையின் மொத்த 90 அடியில் . மூன்று மாதமாக, 85 அடி வரை ததும்பிய நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவ மழையால், கடந்த, 3ம் தேதி, மீண்டும் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்தது.நேற்று அதிகாலை, ஒரு மணிக்கு, 7 ஆயிரம் கன அடி நீரும், 2:00 மணிக்கு, ஆறு மதகுகள் வழியாக, 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வழியோரத்திலுள்ள, இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88 அடியாகவும், நீர் இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,866 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, அப்படியே, உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X