பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் அறிவியல் ஆராய்ச்சி உதவித்தொகை: வேளாண் பல்கலை மாணவர்கள் தேர்வு

Updated : நவ 19, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகைக்காக கோவை வேளாண் பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம், கல்வி என, இரு துறைகளில் சிறந்து விளங்கும் பி.எச்.டி., பட்டப்படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்தாண்டுக்கான பிரதமர் கல்வி உதவி தொகை பெறுவதற்கு கோவை வேளாண்
பிரதமர் அறிவியல் ஆராய்ச்சி உதவித்தொகை: வேளாண் பல்கலை மாணவர்கள் தேர்வு

கோவை: பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகைக்காக கோவை வேளாண் பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.

கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம், கல்வி என, இரு துறைகளில் சிறந்து விளங்கும் பி.எச்.டி., பட்டப்படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்தாண்டுக்கான பிரதமர் கல்வி உதவி தொகை பெறுவதற்கு கோவை வேளாண் பல்கலை நானோ தொழில்நுட்ப துறையை சேர்ந்த வேலுார் மாவட்டம் காகிதப்பட்டறையை சேர்ந்த பிரதீப், ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆளில்லா விமானம் மூலம், நானோ உர உருவாக்கம் - பயிர்களினுாடே ஊடுருவி செலுத்தும் முறை மற்றும் தாவர நுாற்புழு பூஞ்சை நோய் கிருமிகளை நிர்வகிக்க நானோ உயிர் கலப்பின பயன்படுத்துதல், ஆகிய தொழில்நுட்ப ஆராயச்சிகளை மேற்கொள்வதற்காக இவ்வுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர் பிரதீப் கூறுகையில், ''தற்போதுள்ள மாணவர்கள் குடும்பத்தின் உதவியின்றி தங்களது சொந்த முயற்சியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு இதுபோன்ற உதவித் தொகைகள் பெரிதும் உதவுகின்றன. இதுபோன்ற உதவித்தொகைகள் மாணவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்க உதவுகிறது,'' என்றார்.

மாணவி சண்முகபிரியா கூறுகையில்,''முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எங்களை போன்ற மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும். பி.எச்.டி.,யை அவ்வளவு எளிதாக முடித்து விட முடியாது. அதற்காக பெருந்தொகை செலவிட வேண்டும். அனைவரும் பணிக்கு செல்லும் போது நாங்கள் ஆராய்ச்சி செய்ய முற்படுகிறோம். எங்களது தேவைகளை பூர்த்தி செய்யவும், ஆராய்ச்சியை திறம்பட மேற்கொள்ளவும் இந்த உதவித்தொகை பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202105:30:01 IST Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே
Rate this:
Cancel
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
19-நவ-202115:47:43 IST Report Abuse
sundaram sadagopan இந்தியாவில் பல பேர்கள் P hd பட்டம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் , ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு சாதாரண மக்களுக்கு உபயோகமாக இல்லை .ஒரு சாதாரண சமையல் கத்தி கூட சீனாவின் கத்தியாக தான் உபயோகத்தில் உள்ளது . பின் எதற்கு முனைவர் படிப்பு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X