தமிழ்நாடு

நிரம்பியது ஆழியாறு அணை உபரிநீர் வெளியேற்றம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, தொடர் மழை காரணமாக கடந்த ஆக., 31ம் தேதி ஆழியாறு அணை, முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின், உபரிநீர் வீணாகாமல் இருக்க, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது.தொடர்ந்து, காடாம்பாறையில் இருந்து மின் உற்பத்தி செய்து, மேல் ஆழியாறில்
 நிரம்பியது ஆழியாறு அணை  உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, தொடர் மழை காரணமாக கடந்த ஆக., 31ம் தேதி ஆழியாறு அணை, முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின், உபரிநீர் வீணாகாமல் இருக்க, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது.தொடர்ந்து, காடாம்பாறையில் இருந்து மின் உற்பத்தி செய்து, மேல் ஆழியாறில் இருந்து நவமலை வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியது. இரவு, 11:00 மணிக்கு வினாடிக்கு, 6,300 கனஅடி நீர் வரத்து இருந்தது. இரவு, 12:00 மணிக்கு மொத்தம், அணையின், 120 அடி உயரத்தில், 119.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, 11 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X