தமிழ்நாடு

மாணவியரிடம் அத்துமீறல் பேராசிரியர் மீது புகார்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில், பணியாற்றும் ஒரு துறையின் தலைவர் மாணவியரிடம் தவறாக நடந்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.மாணவர்கள் கூறுகையில், 'பேராசிரியர் ஒருவர் மாணவியரிடம் 'வாட்ஸ்அப்' பில் தவறாக பேசியுள்ளார்.மாணவியர் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில், பணியாற்றும் ஒரு துறையின் தலைவர் மாணவியரிடம் தவறாக நடந்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.மாணவர்கள் கூறுகையில், 'பேராசிரியர் ஒருவர் மாணவியரிடம் 'வாட்ஸ்அப்' பில் தவறாக பேசியுள்ளார்.மாணவியர் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்,' என்றனர்.கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி கூறுகையில், ''மாணவர்கள் நேற்று (நேற்று முன்தினம்) இத்தகவலை தெரிவித்தனர். இரு தரப்பில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. இதை, மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெறும்.இதுகுறித்து, 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க புகார் கூறப்பட்டுள்ள பேராசியருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X