மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 பேர் குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 பேர் குழு

Added : நவ 18, 2021
Share
தமிழகத்தில், மழை மற்றும் வெள்ள சேத நிலவரங்களை பார்வையிட, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் ஆறு பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன; குடிசைகள், வீடுகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன; விவசாய பயிர்கள் நாசம் அடைந்து உள்ளன. நிவாரண பணிகளுக்கு நிதி

தமிழகத்தில், மழை மற்றும் வெள்ள சேத நிலவரங்களை பார்வையிட, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் ஆறு பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன; குடிசைகள், வீடுகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன; விவசாய பயிர்கள் நாசம் அடைந்து உள்ளன. நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, மழை, வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக, ஆறு பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா, குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். நிதி, விவசாயம், மின்சாரம், ஜல்சக்தி, சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், தமிழகம் சென்று வந்த பின், ஒருவார காலத்திற்குள் வெள்ள சேத நிலவரங்கள் குறித்து, 15 நகல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குழுவினர் டில்லியில் இன்றோ அல்லது நாளையோ கூடி முறைப்படி ஆலோசனை நடத்த உள்ளனர்.
அப்போது, தமிழக பயண திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். அனேகமாக, 21ம் தேதி இக் குழுவினர் தமிழகம் செல்லலாம் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தயார்நிலையில் மாவட்டங்கள்

இதற்கிடையில் கன மழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவ மழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 48 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட, 61சதவீதம் கூடுதல். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இன்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்கலாம். இன்று கன மழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன.சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதியில் 54 படகுகள், மழை நீரை வெளியேற்ற 46 'பொக்லைன்'கள், 793 ராட்த பம்புகள் தயாராக உள்ளன. இதர மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 பொக்லைன்கள், 2,115 'ஜெனரேட்டர்'கள், 483 ராட்சத பம்புகள் தயாராக உள்ளன.கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,106 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.
பேரிடர் மீட்பு படையினரால் பயிற்சி அளிக்கப்பட்ட, 3,023 காவலர்கள் கடலோர மாவட்டங்களிலும், 834 பேர் சென்னை மாவட்டத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், 1070, மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையங்கள், 1077 என்ற கட்டணமில்லா டெலிபோனுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
சென்னை மக்கள், 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X