தமிழ்நாடு

நீதிபதி சாடுவது நீதித்துறையையா? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: ''மேகலாயா மாநிலத்திற்கு இட மாற்றப்பட்ட நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சாடுவது நீதித்துறையையா, அரசியல் தலைமையையா,'' என, புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இவர், விடைபெற்றுச் செல்லும் முன், அறிக்கை

கோவை: ''மேகலாயா மாநிலத்திற்கு இட மாற்றப்பட்ட நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சாடுவது நீதித்துறையையா, அரசியல் தலைமையையா,'' என, புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இவர், விடைபெற்றுச் செல்லும் முன், அறிக்கை வெளியிட்டிருப்பது, கேள்விக்குறியாயிருக்கிறது.வக்கீல்கள், நீதிபதிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு நிற்காமல், 'இன்று நிலவும் நிலப் பிரபுத்துவ செயல்பாடுகளை என்னால் முற்றாக ஒழிக்க முடியவில்லை' என்று சாடியிருக்கிறார்.நான்கு ஆண்டுக்கு முன், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறையையும் பற்றி கருத்து சொன்னதற்காக, உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, கோல்கட்டா சிறையில் அடைக்கப்பட்டார்.இப்பொழுது சஞ்ஜிப் பானர்ஜி, 'feudal culture' என, சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமை மீதானதா? சமூகத்தின் மீதானதா? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர், இதுபோன்று எப்படி சொல்ல முடியும்? அக்கருத்து எதன் மீதான தாக்குதல் என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.அந்த பொறுப்பில் இருந்து யாரை குற்றம் சுமத்தி இருந்தாலும், அது தவறு தானே? அவருடைய கருத்தை சட்டத்துறை எளிதில் கடந்து போகக்கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு.இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X