ஆழியாறுஅணை திறப்பு பாலக்காட்டில் வெள்ளம் | Dinamalar

தமிழ்நாடு

ஆழியாறுஅணை திறப்பு பாலக்காட்டில் வெள்ளம்

Added : நவ 18, 2021
Share
பாலக்காடு: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை நிரம்பியது. இதனால் அணையின் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்துார், யாக்கரை, பரளி, பாரதப்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சித்துாரில் உள்ள தரைமட்டப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.யாக்கரை ஆற்றில்
 ஆழியாறுஅணை திறப்பு  பாலக்காட்டில் வெள்ளம்

பாலக்காடு: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை நிரம்பியது. இதனால் அணையின் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்தால் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்துார், யாக்கரை, பரளி, பாரதப்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சித்துாரில் உள்ள தரைமட்டப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.யாக்கரை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பரளி ஆற்றில் பாதிபாலம் உயரத்திற்கு வெள்ளம் செல்வதால் போக்குவரத்து தடைபட்டது.'ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,' என பாலக்காடு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X