பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு பயனாளிகள் தேர்வு முகாமிற்கு வந்த மக்கள் ஏமாற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை உதவி நிர்வாக பொறியாளர் ரவிஅம்பேத்கர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பட்டணம்காத்தான் ஊராட்சியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை உதவி நிர்வாக பொறியாளர் ரவிஅம்பேத்கர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பட்டணம்காத்தான் ஊராட்சியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யபடுகிறது. இதற்காக நகர்புற ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து (நவ., 17, 18) நேற்று, நேற்று முன்தினம் அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிலையில், முழு விபரம் தெரியாத ராமநாதபுரம் சுற்றியுள்ள ஊராட்சி, வெளியூர்களிலிருந்தும் ஏராளமானவர்கள் மனு அளிக்க குவிந்தனர். அவர்களிடம் ராமநாதபுரம் நகர்புற ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யவே மனுபெறப்படுவதாக அதிகாரிகள் கூறியதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரசியல் தலையீடு இன்றி நியமாக வீடு, நிலமற்ற ஏழைகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய கலெக்டர் சங்கர்லால் குமாவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X